ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரன்தீப் பொறுப்பேற்பு

பணியிட மாற்றம் செய்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, ஹாசன் மாவட்ட ஆட்சியராகயிருந்த

Updated On :18 ஏப்ரல் 2018, 7:44 am IST

பணியிட மாற்றம் செய்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, ஹாசன் மாவட்ட ஆட்சியராகயிருந்த ரோகிணி சிந்தூரி விடுவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ரன்தீப் பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி. அண்மையில் இவரை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.மைசூரு ஆட்சியராகப் பணியாற்றிய ரன்தீப்பை ஹாசன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி சிந்தூரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இதையடுத்து, அரசின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரோகிணி சிந்தூரி தொடர்ந்தார். இந்த நிலையில், மத்திய நிர்வாக தீர்பாயம், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரன்தீப் பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.