இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்படுகிறது.


இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்படுகிறது.
2017-18-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. 3,52,290 மாணவர்கள், 3,37,860 மாணவிகள் உள்பட 6,90,150 பேர் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டாமாண்டு பியூசி தேர்வுமுடிவுகள் ஏப்.30-ஆம் தேதிகாலை 11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அன்று நண்பகல் 12 மணி முதல் www.pue.kar.nic.in, http://karresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் வெளியிடப்படுகிறது என்று பியூ கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...