கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்: மேயர் சம்பத்ராஜ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
Published on

கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு சி.வி.ராமன்நகர் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை மர்பிடவுன் உள்ளிட்ட தேவாலயங்களில் வாக்கு சேகரித்து அவர் பேசியது: 
முதல்வராக சித்தராமையா பதவியேற்றதும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார். அன்னபாக்யா, பால்பாக்யா திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் மக்கள் பயனடைந்துள்ளனர். பெரும்பான்மை மக்கள் மட்டுமன்றி, சிறுபான்மை மக்களும் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்பாக வாழும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது.  தேசிய அளவில் தொழில்துறை முதலீட்டீல் முதல் மாநிலமாக கர்நாடக விளங்குகிறது. நாட்டிலே வளர்ச்சிப் பணிகளில் கர்நாடகத்தை மாதிரி மாநிலமாக்க சித்தராமையா முயற்சி மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியை மக்களும் விரும்புகின்றனர். எனவே, காங்கிரஸை ஆதரிக்க மக்கள் விரும்புகின்றனர்.
பெங்களூரில் சி.வி.ராமன்நகர் தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மாநிலத்தில் பரவலாக காங்கிரஸுக்கு அமோக ஆதரவு உள்ளதால், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com