உள்ளாட்சித் தேர்தலில் மஜத தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், மஜத மாநிலத் தலைவராக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாத் பதவியேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் தேவெ கௌடா செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அமைத்து போட்டியிட முடியுமா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்பதால், இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களிடம் குழப்பமும், கொந்தளிப்பும் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஆட்சி செய்வதில் இரு கட்சி கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைக்காமல் மஜத தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மஜத நிர்வாகிகளிடம் கருத்துகளை அறிவோம். பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்களை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால், காங்கிரஸ், ம.ஜ.த. இடையே எந்த பிளவும் ஏற்படாது. இது உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தேவெ கௌடா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

