அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கிறிஸ்துமஸ்: 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கர்நாடகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்க அந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கர்நாடகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்க அந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிச. 21 முதல் 22-ஆம் தேதி வரை கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கெம்பேகெளடா பேருந்து நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி,விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வாட், ராய்ச்சூரு, கலபுர்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மைசூருசாலை சாட்டிலைட் பேருந்துநிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூர், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகர், மெர்கரா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
விஜயநகர், ஜே.பி.நகர், ஜெயநகர் 4-ஆவது பிளாக், 9-ஆவதுபிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங்(ராஜாஜிநகர்),மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்துநிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வாட் உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளுக்கு மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் செல்லும். ஹாசன், மங்களூரு,சிக்மகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, ஹுப்பள்ளி, பெல்லாரி, ஹொசபேட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பேகெளடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 
கலபுர்கி, பெல்லாரி, ராய்ச்சூரு, ஹொஸ்பேட், கொப்பள், யாதகிரி, பீதர் உள்ளிட்ட வடகிழக்கு பகுதி தடத்தை நோக்கி செல்லும் பேருந்துகள் பீன்யா பசவேஸ்வரா பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படும். முன்பதிவுசெய்யாத பயணிகளுக்கு கெம்பேகெளடா பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  w‌w‌w.‌k‌s‌r‌t​c.‌i‌n என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள 707 முன்பதிவுமையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.