தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பெங்களூரு-மைசூரு இடையே நெடுஞ்சாலை பணி: ஜனவரி 15-இல் தொடங்கும்: அமைச்சர் எச்.டி.ரேவண்ணா

பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணி ஜனவரி  15-இல் தொடங்கும் என்று கர்நாடக

Updated On :25 டிசம்பர் 2018, 8:12 am IST

பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணி ஜனவரி  15-இல் தொடங்கும் என்று கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
கோவா- கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கான சாலை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து,  பெங்களூரு விதானசெளதாவில் கோவா மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் தவண்கருடன் ரேவண்ணா திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறியது:-
பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணி ஜனவரி 15-ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலையில் 20 கி.மீ, இடையே ஒரு முகாம் என்ற வகையில் 11 முகாம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.
நெடுஞ்சாலை பணிகளுக்கு 30 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளபோதிலும், 24 மாதங்களில் பணிகளை முடித்து தருவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். 
பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 3451 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூ. 3 ஆயிரம் கோடியும் செலவிடப்படும். 
பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. 
கோவா-கர்நாடகம் இடையே உள்ள சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கோவா-கர்நாடகம் எல்லைகள் இடையே உள்ள சாலைகளை மேம்படுத்துவது குறித்து, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். கர்நாடக மாநிலம் பெலகாவி, ஹுப்பள்ளியிலிருந்து கோவாவுக்கு நாள்தோறும் 3 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன என்றார் ரேவண்ணா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.