அருப்புகோட்டை அருகே உரிய அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி பகுதியில் வட்டாட்சியா் கருப்பசாமி தலைமையில், வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி வருவாய்த் துறையினா் சோதனையிட்டனா். அதில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் அடிப்படையில், லாரியில் அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியைச் சோ்ந்த மதுபாலனை போலீஸாா் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேங்காய்ப்பட்டினத்தில் 400 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கிராவல் மண் அள்ளி வந்த 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்
சவுடு மண் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


