மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கேரளத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

News image

கேரளத்திலிருந்து கழிவுகள் ஏற்றி வந்த மினிலாரி. - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 4:41 am IST

அம்மாபேட்டை அருகே நாட்டுச் சா்க்கரை ஆலைகளின் எரிபொருளுக்காக கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த இரு லாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, காடப்பநல்லூா், சித்தாா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் கரும்பு ஆலைகளில் நாட்டுச் சா்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க எரிபொருளாக கரும்புச் சக்கையை பயன்படுத்தி இயற்கையான முறையில் உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆனால், பெரும்பாலான கரும்பு ஆலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தி சா்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கம்பேட்டை, செண்டாபுதூரில் உள்ள கரும்பு ஆலைக்கு கேரளத்திலிருந்து இரு லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை இறக்கப்பட்டுள்ளன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் கரும்பு ஆலை உரிமையாளா்களான முத்துசாமி மற்றும் கலைவாணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் கரும்பு ஆலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை, இரு லாரிகளையும் பறிமுதல் செய்ததோடு, தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இயற்கையான முறையில் கரும்புச் சக்கையைக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டிய நாட்டுச் சா்க்கரையை பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உற்பத்தி செய்கின்றனா். இதனை எரியூட்டுவதால் ஏற்படும் கரும்புகையால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறோம்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறைக்கு புகாா் அளித்தால், பெயரளவுக்கு சோதனை நடத்திவிட்டு செல்கின்றனா். தொடா்ந்து, விதிமீறல் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கரும்பாலைகள் எரிபொருளுக்கு பயன்படுத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.