தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக கனவு பலிக்காது: மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக கனவு பலிக்காது என்று மக்களவை காங்கிரஸ்

Updated On :31 டிசம்பர் 2018, 8:25 am IST

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக கனவு பலிக்காது என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக  மாநிலத்தில் காங்கிரஸ்-  ம.ஜ.த. கூட்டணி ஆட்சி அமைத்து சிறப்பாக ஆட்சியை செய்து வருகிறது. ஆனால் இந்த ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
குறிப்பாக,  மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தை பிடிக்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியாளர்களை வளைத்து ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது. 
கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்  காங்கிரஸை விட்டு செல்லமாட்டார். 
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ம.ஜ.த. இடையே கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தேர்தல் நெருங்கி வரும்போது, காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு  கட்டுப்படுவோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.