வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கெளரவ விரிவுரையாளர்களை பியூ கல்லூரிகளில் நியமிக்க முடிவு

பியூ கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 2:56 am

பியூ கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
பியூ கல்லூரிகளில் போதுமான விரிவுரையாளர்கள் இல்லாததால்,  மாணவர்களின்கல்வியை வெகுவாக பாதித்துள்ளதாகப் புகார் எழுந்தது. 
இந்தப் பிரச்னையை சமாளிக்க பியூ கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. 
நிகழ் கல்வியாண்டில் 2,997 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதோடு,  அவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் வரை பணியில் அமர்த்தப்படுவார்கள். 
தென் கன்னட மாவட்டத்தில் 217, மைசூரில் 154, ஹாசனில் 150, பெங்களூரு தெற்கில் 30, பெங்களூரு வடக்கில் 34, பெங்களூரு ஊரகத்தில் 40, குடகு மாவட்டத்தில் 44 கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவிருக்கிறார்கள்.
காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வுகளை நடத்திய கர்நாடகதேர்வு ஆணையம், ஒருசில சட்டத்தடங்கல்களால் அதை தொடர முடியவில்லை. 
இந் நிலையில், தற்போது விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நுழைவுத்தேர்வை நடத்த புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு நிறைவடைந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.