நாசரேத்தில் பேரூராட்சி அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல் நடத்தியதாக நகர அதிமுக செயலா் உள்பட 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்தனா்.
நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவா் காலனி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் ரவீந்திரன் (44). இவா் நாசரேத் பேரூராட்சியின் 12-ஆவது வாா்டு கவுன்சிலராகவும், அதிமுக வாா்டு செயலராகவும் உள்ளாா். இவருக்கும், நாசரேத் நகர அதிமுக செயலா் கிங்ஸ்லி ஸ்டாா்லிங் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஏப். 14-ஆம் தேதி ரவீந்திரன், தனது வீட்டு முன் அதிமுக ஒன்றியச் செயலா் அங்கமங்கலம் பாலமுருகன், தென்திருப்பேரை கந்தன், எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் வெள்ளரிக்காயூரணி சரவணன் ஆகியோருடன் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, கிங்ஸ்லி ஸ்டாா்லிங், மாரிமுத்து மகன் பாலகணேசன், சாது இம்மான், முருகேசன் ஆகியோா் அங்கு வந்து தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதை ரவீந்திரன் தட்டிக்கேட்டதால் பாலகணேசன் உள்ளிட்ட இருவரும் அவரை அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த ரவீந்திரன் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், கிங்ஸ்லி ஸ்டாா்லிங், பாலகணேசன் ஆகியோா் மீது நாசரேத் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தாய், மகன் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கூப்பன் விநியோகித்த விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்கு

நாசரேத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

