வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசானது எந்த நேரத்திலும் கவிழலாம்: மத்திய அமைச்சர் சதானந்தகெளடா

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசானது எந்த நேரத்திலும் கவிழலாம் என்று மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

Updated On :9 ஜூலை 2018, 3:01 am

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசானது எந்த நேரத்திலும் கவிழலாம் என்று மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்,  மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளன.  ஆட்சியைப் பிடித்தவுடன்,  இரண்டு கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்,  ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
தங்கள் இருக்கையை காப்பாற்றிக் கொள்ள இரண்டு கட்சியினரும் பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றனர்.  இதனால்  எந்த வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறாமல் உள்ளன. அரசு இயந்திரமும் முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது.
அமைச்சர்களின் பேச்சை அரசு அலுவலர்களும் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். 
கர்நாடகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்பால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மறந்து, கூட்டணி அரசு பதவி சண்டையிலேயே மூழ்கியுள்ளது. 
 மஜத- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் மூன்றாவது அணி கிழிந்த துணியைப்போல் ஆகியுள்ளது. அதனை மீண்டும் ஒட்டவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கருத்துகள் உள்ளன. இதனால் அவர்கள் ஒற்றுமையாவது முடியாத காரியம். எனவே அவர்களால் மத்தியில் ஆட்சியை பிடிப்பது ஒருபோதும் முடியாது. 
காங்கிரஸுடன் ஒருபோதும் செல்ல மாட்டேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை தோற்கடிப்பது என்பது இயலாத காரியம். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்றார் சதானந்த கௌடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.