டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சலுகைக் கட்டணப் பேருந்து அட்டை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பி.எம்.டி.சி.) சார்பில் ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்

Updated On :23 ஜூலை 2018, 9:24 am IST

பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பி.எம்.டி.சி.) சார்பில் ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கட்டணப் பேருந்து அட்டையைப் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி, ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சலுகைக் கட்டணப் பேருந்து அட்டையை வழங்கி வருகிறது.
அச்சிடப்பட்ட பேருந்து அட்டையைப் பெற மாணவர்கள் கழகத்தின் அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்துபோக நேரிடும். மேலும் 4-5 சான்றிதழ்கள், ஆவணங்களை அளிக்க வேண்டியிருக்கும். பேருந்து அட்டைகளை வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்க முடிவு செய்துள்ள போக்குவரத்துக் கழகம், தற்போது மாணவர்களின் வீட்டுவாசலுக்கே அவற்றை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
தானியங்கி வழியே பேருந்து அட்டைகளை மாணவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பேருந்து அட்டைபெற இணையதளம் அல்லது ஊடாடும் குரல் பதில்மொழி (ஐ.வி.ஆர்.) மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆரம்ப, உயர்நிலை, பியூ கல்லூரி மாணவர்கள், பள்ளிகள், பியூ கல்லூரிகள்  இணையதளம் அல்லது ஐவிஆர் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆனால் கல்லூரி மாணவர்கள் இணையதளம் அல்லது ஐ.வி.ஆர். முறையில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 161 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர,  ‌w‌w‌w.‌m‌y​b‌m‌t​c.​c‌o‌m  இணையதளத்திலும் பதிவிடலாம்.
மின்-விண்ணப்பங்கள் வழியே விண்ணப்பங்களைச் செலுத்தியிருந்த மாணவர்களின் முகவரிக்குப் பேருந்து அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சலரிடம் பேருந்துக்கான சலுகைக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு, ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொண்டு, அதைப் பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒப்புகைச் சீட்டுடன் பயணிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌m‌y​b‌m‌t​c.​c‌om என்ற இணையதளத்தைக் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.