குடகு மாவட்டத்தை மறுகட்டமைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள் தெரிவித்தார்.
ஆதிசுன்சுனகிரி மடத்தின் சார்பில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த "குடகு மாவட்டத்துக்கு நமது கொடை' என்ற நன்கொடை வசூலிப்பு நடைபயணத்தை தொடக்கிவைத்து, அவர் பேசியது: நமது நாட்டுக்காக அனைத்தையும் வழங்கிய குடகு மாவட்ட மக்கள், தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் குடகு மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், மறுகட்டமைப்புக்கும் பங்காற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. குடகு மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கர்நாடக மக்கள் அனைவரும் தாராள இதயத்தோடு நன்கொடைகளை வாரி வழங்க வேண்டும். எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைக் காட்டிலும் எதையாவது கொடுப்பதுதான் நல்ல பண்பாக இருக்க முடியும்.
குடகு மாவட்டம், நமது நாட்டின் மிக முக்கியமான அங்கமாகும். நமது உடலில் ஏதாவது பகுதி பாதிக்கப்பட்டால் எப்படி துடிப்போமோ, அதுபோலதான் குடகு மாவட்டமும் துடித்துக் கொண்டுள்ளது. எனவே, குடகு மாவட்டத்தின் மறுகட்டமைப்புக்கும், துயர்துடைப்புப் பணிக்கும் மக்கள் வாரி வழங்க வேண்டும். உதவி செய்வதில் மதம் முக்கியமல்ல. நன்கொடை சேகரிக்கும் நடைபயணத்தில் இந்து, சமணம்,பெளத்தம், முஸ்லிம், கிறிஸ்துவ மக்களும் கலந்துகொண்டுள்ளனர். துன்பத்தில் தவிக்கும் குடகு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது நம் அனைவரின்கடமையாகும்.
குடகு மாவட்டத்தில் இருந்து நமது ராணுவத்துக்கு ஏராளமான வீரர்கள் பங்காற்றியுள்ளனர். தென்கர்நாடகத்தின் மக்களின் உயிர்நாடியாக இருக்கும் காவிரி ஆறு குடகு மாவட்டத்தில் இருந்து பிறந்தோடுகிறது. தென்மாவட்டங்கள் செழிப்பாக இருப்பதற்கு குடகு மாவட்ட மக்களே காரணமாவர். இயற்கை வளத்தால் நிறைந்துள்ள குடகு மாவட்டம், அதே இயற்கை பேரிடரால் சீரழிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் குடகு மாவட்டத்தை புதுப்பிக்க நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றார் அவர். நன்கொடை சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் வி.சோமண்ணா ரூ.25 லட்சம், எம்.கிருஷ்ணப்பா ரூ.25 லட்சம், முன்னாள் துணைமேயர் என்.சீனிவாஸ் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

