தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து யானைகள் மைசூருக்கு புறப்பட்டன. இதற்காக நடந்த நிகழ்ச்சியில் யானைகள் உற்சாகமாக வழி அனுப்பிவைக்கப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா 409-ஆம் ஆண்டாக அக்.10 முதல் 19-ஆம் தேதிவரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. தசரா விழாவின் இறுதி நாளான அக்.19-ஆம் தேதி மனதை மயக்கும் யானை ஊர்வலம் இடம்பெறுகிறது. யானை அர்ஜுனா, 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்துகொண்டு ஊர்வலத்தை வழிநடத்தி செல்லும். இதை பின் தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்த கண்கொள்ளா காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில்
குவிந்திருப்பார்கள்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அர்ஜுனா (58 வயது), வரலட்சுமி(62 வயது), விக்ரமா(45 வயது), தனஞ்செயா(35 வயது), கோபி (36 வயது) ஆகிய 5 யானைகள் ஞாயிற்றுக்கிழமை மைசூரை நோக்கி பயணம் புறப்பட்டன. மைசூரு மாவட்டம், ஹுனசூர் வட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் உள்ள வீரனஹொசஹள்ளி வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உற்சாகமான விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா சிறப்பு பூஜை செய்து பூமாரி பொழிந்து யானைகளை உற்சாகமாக வழியனுப்பி வைத்தார். இவ்விழாவில் சுற்றுலாத் துறைஅமைச்சர் எஸ்.ஆர்.மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எச்.விஸ்வநாத், தன்வீர்சேட், அஸ்வின்குமார்மகாதேவ், பி.ஹர்ஷாவர்த்தன், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் நயிமாசுல்தானா, தென் சரக காவல்ஆணையர் கே.வி.சரத்சந்திரா, மாவட்ட ஆட்சியர் அபிராம் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு வெல்லம், தேங்காய், கரும்பு உள்ளிட்ட தின்பண்டங்கள் வழங்கப்பட்டன. மேளதாளங்களுடன் யானைகள் வழியனுப்பிவைக்கப்பட்டன. லாரியில் பயணம் மேற்கொள்ளும் யானைகள், மைசூருவில் அசோக்புரத்தில் உள்ள வன மாளிகை வளாகத்தில் செப்.5-ஆம் தேதிவரை தங்கவைக்கப்படுகின்றன. அதன் பிறகு செப்.5-ஆம் தேதி அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் யானைகள் தங்கவைக்கப்படுகின்றன. தசரா திருவிழா முடிந்த பிறகு, யானைகள் மீண்டும் காடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன.
முக்கிய அம்சங்கள்
* யானை பயணம் சடங்கு முதல் முறையாக 1992-ஆம் ஆண்டு தொடங்கியது
* முதல்பிரிவு யானைகள் மட்டுமே புறப்பட்டுள்ளன
* நிகழாண்டு தசரா திருவிழா,குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் எளிமையாகக் கொண்டாடப்படுகிறது
* இரண்டாம் பிரிவு யானைகள் அடுத்த வாரத்தில் மைசூருவுக்கு புறப்படும்
* மொத்தம் 12 யானைகள் அக்.19-இல் நடக்கவிருக்கும் தசரா யானை ஊர்வலத்தில் பங்கேற்கவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

