முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பெங்களூரில் வாகன நிறுத்துமிடங்கள்: மேயர் இன்று ஆலோசனை

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் குறித்து அரசு அலுவலர்களுடன்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:21 am IST

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் குறித்து அரசு அலுவலர்களுடன் மேயர் கங்காம்பிகே திங்கள்கிழமை   ஆலோசனை செய்ய உள்ளார்.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிப். 20-ஆம் தேதி முதல் விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியைக் காண சனிக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வாகனங்களை வாயில் எண் 5-இன் அருகே நிறுத்தம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. 
விமான சாகசங்கள் நடைபெற்று வந்த நிலையில், முற்பகல் 11.55 மணியில் வாகன நிறுத்தமிடத்தில் திடீரென தீ பரவியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 278 கார்கள் முழுமையாகவும், 73 கார்கள் பகுதியாக தீக்கிரையானது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாகன நிறுத்தங்களில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் மேயர் கங்காம்பிகே திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 
கூட்டத்தில் சட்டவிரோதமாக உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.