குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு கிறிஸ்தவ பேராயர் இரங்கல்

சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On :24 ஜனவரி 2019, 2:20 am IST

சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவக்குமார சுவாமிகள், மிகச் சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், மனிதநேயவாதியாகவும், கல்வியாளருமாகவும் விளங்கினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மீது அளவிடமுடியாத அன்பை பொழிந்துவந்த சிறந்த புனிதர் ஒருவரை நாடு இழந்துள்ளது. 
சமுதாயத்தில் ஜாதி, நிறம், பகுதி, மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட எண்ணற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளின் மீது புனிதரின் அன்பு நிலையாக இருந்ததை காலம் மறக்காது. சிவக்குமார சுவாமிகளின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என  அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.