16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!

Gulmarg: Rescue operation underway after around 300 tourists were stranded aboard the largest cable car as the system developed technical problems, at a Gulmarg resort in Jammu and Kashmir, Monday, May 25, 2026. (PTI Photo) (PTI05_25_2026_000259B)

குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு! - PTI

Published On :

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ஆசியாவின் உயரமான ரோப்வே கேபிள் கார் சேவைகளுள் ஒன்றான குல்மார்க் கோண்டாலாவில் திங்கள்கிழமை(மே 25) ஏற்பட்ட தொழில்நுட்ப பழுதால் சுமார் 300 பயணிகள் அந்தரத்தில் சிக்கி தவித்தனர்.

அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ராணுவ உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாக ஈடுபட்டன. சுமார் ஆறு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணி இன்றிரவில் வெற்றிகரமாக முடிவடைந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ள 65 கேபின்களில் சிக்கிய 300 பயணிகளை மீட்கும் சவாலான பணியை வெற்றிகரமாக முடித்த பேரிடர் மீட்பு குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “காஷ்மீரின் குல்மார்க்கில் அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டமைக்காக இந்தியாவின் பேரிடர் சேவை படைகளுக்குப் பாராட்டுகள்.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளையும் ராணுவ வீரர்களையும் உள்ளூர் போலீஸார் மற்றும் அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய பேரிடன் மீட்புக் குழுக்கள் 6 மணி நேர மீட்பு பணிக்குப் பின், 65 கேபிள் கார்களில் பரிதவித்த பயணிகளை மீட்டனர். அவர்களுடைய திறனுக்கு இந்த நாடு தலைவணங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rescue operations conclude in Jammu and Kashmir's Gulmarg after gondola malfunctions; all stranded passengers evacuated, officials say.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.