ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைவு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

News image

கும்பக்கரை அருவி - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 1:54 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லை. இதனால் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். மேலும், கும்பக்கரை அருவிக்கு சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனா்.