பெங்களூரில் ஜன.27-ஆம் தேதி முதல் கன்னடப் பயிற்சி வகுப்பு தொடங்கவிருக்கிறது.
இதுகுறித்து கன்னட பிரசார அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தன்னார்வ தொண்டு அமைப்பான கன்னட பிரசார அமைப்பின் சார்பில் கன்னடப் பயிற்சி வகுப்பு, பெங்களூருவில் ஜன.27-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. மெக்ரத்சாலை, கருடாமால் அருகில் ரிச்மன்ட்சாலையில் உள்ள ஹொஸ்மத் மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 10.30 முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் கன்னடமொழியை பேசவும், எழுதவும் கற்றுதரப்படும்.
பேச்சு வழக்கு கன்னடம் தவிர, உயர்நிலை கன்னட பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9448878569, 8105712883 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








