தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பொங்கல் விழா என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தெரிவித்தார்.
கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற திராவிடர்திருநாள்-பொங்கல் திருவிழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: தமிழ்மொழியை தமிழர்கள் உயிராக நேசிப்பதுபோல, உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் ஜாதி,மத பேதங்களை கடந்து தமிழர்களின் விழாவாக பொங்கல் விளங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் திருவிழா பொங்கல்.
திராவிடர்களின் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பொங்கல் விழாவாகும். விழாக்களை நடத்துவது தேவையில்லாத செலவு என்று கூறிவந்த தந்தை பெரியார்கூட தமிழர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வழியில் தமிழர்களாகிய நாமும் தொடர்ந்து பொங்கல்விழாவை கொண்டாடி மகிழ வேண்டும் என்றார்.
முன்னதாக, கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் தலைவர் மு.சானகிராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிருபாநிதி கட்சிக் கொடியை ஏற்றினார். கி.சு.தென்னவன் மொழி வாழ்த்து பாடினார். விழாவில் கட்சிச் செயலாளர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், முத்துச்செல்வன், கி.சு.இளங்கோவன், வீ.மு.வேலு, தங்கராமசந்திரா, கஜபதி, பழனிவேல், கோ.சண்முகம், வீ.ரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


