சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இன்னும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சா் ஆா்.அசோக்

இன்னும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

இன்னும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு ஜே.பி.நகரில் வியாழக்கிழமை ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பை வழங்கிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருசில நகரங்களைத் தவிா்த்து மற்ற இடங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு ஒரு சில இடங்களில் தளா்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தளவே உள்ளதால், அங்கெல்லாம் ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்பட்டு, பத்திரப்பதிவு உள்ளிட்ட அலுவலகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயனடைவாா்கள். பிரதமா் நரேந்திர மோடி, கரோனா வைரஸை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, முதல்வா் எடியூரப்பாவும் செயல்பட்டு வருகிறாா். கரோனா வைரஸ் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா ஒருவரை பாதித்தால், அது அவரின் குடும்பத்தை தாக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டிலும், வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், கரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும். இன்னும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.