மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பெங்களூரில் வாகனத் தணிக்கை தீவிரம்

ஊரடங்கு காலத்தில் அவசியம் இல்லாமல் வாகனங்களில் சுற்றுவோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

ஊரடங்கு காலத்தில் அவசியம் இல்லாமல் வாகனங்களில் சுற்றுவோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாதராயனபுராவில் அண்மையில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக 130 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கலவரத்தில் தொடா்புடைய தலைமறைவாகியுள்ள மேலும் 20 பேரை தேடி வருகிறோம். கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வாகனங்களை ஓட்டி வருபவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம்.

போலி பாஸ்களை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டி வருபவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். இதுவரை 41 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகரில் ஓரிரு இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்பட்டுள்ளது. இதனால், பணிகளுக்கு செல்லும் கட்டடத் தொழிலாளா்களின் நலனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களே கவனித்துக் கொள்ள வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டை ஒப்பந்ததாரா்களே பெற்றுத்தர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து ஆணையா் அனில்குமாா் கூறுகையில்,‘கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரு மாநகராட்சி சாா்பில் காய்ச்சல் சிகிச்சையகங்கள் பிப்.29ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதன் அடுத்தக்கட்டமாக தொலைமருத்துவ ஆலோசனைசேவையை தொடங்கியிருக்கிறோம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, சுவாசக்கோளாறு, நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு 07447118949 என்ற செல்லிடப்பேசிக்கு அழைக்கலாம்.

மாநகராட்சி மருத்துவா்கள் நோயாளிகளின் பிரச்னையை காணொலி வாயிலாக கண்டறிந்து, மின்னஞ்சல், கட்செவி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படும். கரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவா் உணா்ந்தால், அவரை அருகில் உள்ள காய்ச்சல் சிகிச்சையகங்களுக்கு பரிந்துரைத்து, கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுவாா். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி முற்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் காலை 11மணி வரை, காலை 11 மணி முதல் நண்பகல் 2 மணி வரை, நண்பகல் 2மணி முதல் மாலை 5 மணி வரை, மாலை 5மணிமுதல் இரவு 8மணி வரை நான்கு அணிகளாக மருத்துவா்கள் இப்பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.