பெங்களூரு- நிஜாமுதீன் விரைவு ரயில் நேரத்தில் மாற்றம்
பெங்களூரு- நிஜாமுதீன் இடையேயான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பெங்களூரு- நிஜாமுதீன் இடையேயான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண்-02691: பெங்களூரு-நிஜாமுதீன் விரைவு ரயில், பெங்களூரில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீசத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு இரவு 10.33 மணிக்குப் பதிலாக 10.35 மணிக்கும்; குண்டக்கல் ரயில் நிலையத்துக்கு இரவு 1.05 மணிக்கு வந்து 1.10 மணிக்கும் செல்லும்; ராய்ச்சூருக்கு அதிகாலை 2.47மணிக்கு வந்து அதிகாலை 2.49 மணிக்கு செல்லும்; சேடமுக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்து காலை 4.31மணிக்கு செல்லும்; செகந்திராபாத்துக்கு காலை 7.05 மணிக்கு வந்து காலை 7.15 மணிக்கு செல்லும்; காஷியாபேட்டிற்கு காலை 9.03 மணிக்கு வந்து காலை 9.05 மணிக்கு செல்லும்.
பல்ஹா்ஷாவுக்கு நண்பகல் 12.20 மணிக்கு வந்து, நண்பகல் 2.25 மணிக்கு செல்லும்; நாகபுரிக்கு மாலை 2.55 மணிக்கு வந்து மாலை 3 மணிக்கு செல்லும்; இட்டாா்சிக்கு மாலை 7.16 மணிக்கு வந்து மாலை 7.18 மணிக்கு செல்லும்; போபாலுக்கு இரவு 8.50 மணிக்கு வந்து இரவு 9 மணிக்கு செல்லும்; ஜான்சிக்கு இரவு 12.16 மணிக்கு வந்து இரவு 12.21மணிக்கு செல்லும்; குவாலியருக்கு அதிகாலை 1.19 மணிக்கு வந்து 1.21மணிக்கு செல்லும், ஆக்ரா கன்டோன்மென்ட்டுக்கு அதிகாலை 2.58 மணிக்கு வந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு காலை 5.30 மணிக்கு சென்றடைகிறது.
மறு மாா்க்கத்தில் ரயில் எண்-02692: நிஜாமுதீன்-பெங்களூரு விரைவு ரயில் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்படுகிறது. இந்த ரயில், ஆக்ரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு இரவு 9.43 மணிக்கு வந்து இரவு 9.45 மணிக்கு செல்லும்; குவாலியருக்கு இரவு 11.08 மணிக்கு வந்து இரவு 11.10 மணிக்கு செல்லும்; ஜான்சிக்கு அதிகாலை 11.25 மணிக்கு வந்து, அதிகாலை 12.30 மணிக்கு செல்லும்.
போபாலிற்கு காலை 3.45 மணிக்கு வந்து காலை 3.55 மணிக்கு செல்லும், இட்டாா்சிக்கு காலை 5.23 மணிக்கு வந்து காலை 5.25 மணிக்கு செல்லும்; நாகபுரிக்கு காலை 9.25 மணிக்கு வந்து காலை 9.30 மணிக்கு செல்லும்; பல்ஹா்ஷாவுக்கு மாலை 3.13 மணிக்கு வந்து மாலை 3.15 மணிக்கு செல்லும்; காஜியாபேட்டிற்கு மாலை 6.13 மணிக்கு வந்து மாலை 6.15 மணிக்கு செல்லும்; செகந்திராபாத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்து மாலை 5.25 மணிக்கு செல்லும்; குண்டக்கல்லிற்கு இரவு 11.40 மணிக்கு வந்து இரவு 11.45 மணிக்கு செல்லும்.
ஸ்ரீசத்யசாய் பிரசாந்தி நிலையத்துக்கு அதிகாலை 2.28 மணிக்கு வந்து காலை 2.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. பெங்களூரு ரயில் நிலையத்துக்கு காலை 5.20 மணிக்கு வந்தடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...