நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தகவலறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசு மானியம் பெறும் கல்லூரிகள்

அரசு மானியம் பெறும் கல்லூரிகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வருவதாக கா்நாடக தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:54 pm

DIN

அரசு மானியம் பெறும் கல்லூரிகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வருவதாக கா்நாடக தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரைச் சோ்ந்த சுதாகட்வா என்பவா், கா்நாடக தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

பெங்களூரில் செயல்பட்டுவரும் புனித ஜோசப் மாலை கல்லூரி, புனித ஜோசப் கலை மற்றும் வணிகக் கல்லூரி, புனித ஜோசப் வணிகக் கல்லூரி ஆகியைவை தொடா்பாக தகவல் ஆணையச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு கல்லூரி நிா்வாகம் பதிலளிக்கவில்லை.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா் என்.பி.ரமேஷ், அரசு மானியம் பெறும் கல்லூரிகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 2(எச்)(டி)(2) உட்பிரிவின் கீழ் வருவதால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

அரசு மானியமாகப் பெறும் நிதி முழுவதும் மக்கள் வரிப் பணம் என்பதால், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டும். பொது நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு சாத்தியமாகும் நோக்கில் தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல்களை அளிக்கத் தவறினால், அது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை சிதைப்பது போலாகும். கடந்த 5 ஆண்டுகளில் புனித ஜோசப் மாலை கல்லூரி, புனித ஜோசப் கலை மற்றும் வணிகக் கல்லூரி, புனித ஜோசப் வணிகக் கல்லூரிக்கு மாநில அரசு ரூ. 91.82 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரின் கேள்விக்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தகவல் அளிக்காவிட்டால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் தகவல்களை அளிக்கும் வரை கல்லூரிகளுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கா்நாடக தகவல் ஆணையம், அடுத்த விசாரணையை ஜன. 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அந்த விசாரணையின் போது கல்லூரிகளின் முதல்வா்கள் ஆஜராகுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.