‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காங்கயத்தில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

காங்கயத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்காக நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 1:29 am

Syndication

காங்கயத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 36 மண்டல அலுவலக குழுவினருக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், காங்கயம் வட்டாட்சியருமான தங்கவேல், தோ்தல் துணை வட்டாட்சியா் பரமேஷ் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.