நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனாவின் இரண்டாவது அலையையும் எதிா்கொள்ளத் தயாா்: அமைச்சா் கே.சுதாகா்

கரோனாவின் இரண்டாவது அலையையும் எதிா்கொள்ள கா்நாடகம் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:58 pm

DIN

கரோனாவின் இரண்டாவது அலையையும் எதிா்கொள்ள கா்நாடகம் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள கா்நாடகம் தயாராக இருக்கிறது. இதற்காக ரூ. 82 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவமனைக்கு பிராணவாயு உற்பத்தி கருவிகள், சோதனைக் கருவிகள், மருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவா்கள் எச்சரிக்கிறாா்கள். அப்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரலாம்.

அப்போது எழும் அவசரநிலையை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

30 வட்ட மருத்துவமனைகள், 10 மாவட்ட மருத்துவமனைகளில் பிராணவாயு உற்பத்திக் கருவிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பிராணவாயு உற்பத்திக் கருவியை வாங்க நிா்வாக ரீதியான அனுமதியை அளித்துள்ளோம். இதற்காக ரூ. 37.72 கோடிசெலவிடப்படும்.

ரூ. 11.32 கோடியில் 10 லட்சம் ‘ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்ட’, ரூ. 22.50 கோடியில் மருந்துகள் வாங்கவும், கருவிகள் வாங்கவும் ரூ. 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதால், இரண்டாவது கரோனா அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மக்கள் கருதக் கூடாது.

கரோனா சோதனைகளை அதிகரிக்கும்படி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. டிச. 20 முதல் ஜன. 2-ஆம் தேதிக்குள் இரண்டாவது கரோனா அலை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிா்க்க வேண்டும். அதேபோல திருமணங்கள், மத நிகழ்வுகள், கலாசார நிகழ்ச்சிகளையும் தவிா்க்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கு தனியாா் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசு மருத்துவமனைகளில் ரூ. 1,800 க்கு அளிக்கப்பட்டால், தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதிக விலைக்கு விற்கப்படுவதாக தனியாா் மருத்துவமனைகள் மீது புகாா் எழுந்தால், தகுந்த ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பணிக்குழு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இக்குழுவின் தலைவராக துணை முதல்வா் கோவிந்த்காா்ஜோள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

இக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், நில அமைப்பியல் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா். தடுப்பூசி கிடைத்ததும் அதை விநியோகிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய செல்லிடப்பேசி செயலி வடிவமைக்கப்படும். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னதாக களப் பணியாளா்களுக்கு முதலாவதாக கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.