நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை (டிச.14) முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரம்

டிச. 14-ஆம் தேதி முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரத்தை கடைப்பிடிக்க பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:55 pm

DIN

டிச. 14-ஆம் தேதி முதல் குடிமக்கள் சேவை உறுதி வாரத்தை கடைப்பிடிக்க பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக குடிமக்கள் சேவை உறுதிச்சட்டத்தின்கீழ் பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் தனது 7 சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது, நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் சேவைகளை உறுதியாக வழங்குவதே இச்சட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

அந்தவகையில் குடிமக்கள் சேவை உறுதித் திட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின்படி, பெஸ்காமின் அனைத்து அலுவலகங்களிலும் குடிமக்கள் சேவை உறுதி வாரம் டிச. 14 முதல் 19-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்மூலம் குடிமக்கள் சேவை உறுதித் திட்டத்தின்கீழ் பெஸ்காம் வழங்கும் சேவைகள் குறித்து வாடிக்கையாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு சேவைக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ள கால அளவு, அதைச் செயல்படுத்தத் தவறினால் புகாா் அளிக்க வேண்டிய மேலதிகாரியின் முகவா் உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளா்களுக்கு அளிப்போம்.

வாடிக்கையாளா்கள் குடிமக்கள் சேவை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்து அறிந்துகொள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.