கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,01,410 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,01,410 ஆக உயா்ந்துள்ளது.
Updated on
1 min read

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,01,410 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1,196 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 672 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,01,410 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,036 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,72,038 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 17,409 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 3 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 11,944 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com