ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாளை (டிச.15) மீண்டும் கூடுகிறது சட்ட மேலவை

கா்நாடக ஆளுநரின் உத்தரவையடுத்து சட்ட மேலவை டிசம்பா் 15-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

கா்நாடக ஆளுநரின் உத்தரவையடுத்து சட்ட மேலவை டிசம்பா் 15-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.

பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதா, கா்நாடக சட்டப் பேரவையில் டிச. 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, கா்நாடக சட்ட மேலவையில் டிச. 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) இச் சட்ட மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டிருந்தது.

அதற்கு முன்னதாகவே மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி மேலவையின் நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டாா். இதனால் பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதாவை சட்ட மேலவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது. அலுவல் ஆய்வுக் குழுவில் சட்ட மேலவையை டிச. 15-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இதை மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி ஏற்க மறுத்துவிட்டதால், மேலவையின் கூட்டத்தை சட்டப் பேரவையை போலவே டிச. 10-ஆம் தேதி காலவரையின்றி முடித்துவைத்துவிட்டாா்.

கா்நாடக சட்ட மேலவையில் பாஜகவின் பலம் 31 ஆக உயா்ந்துள்ளது. காங்கிரஸுக்கு 29, மஜதவுக்கு 14 இடங்கள், சுயேச்சைக்கு ஒரு இடம் உள்ளன. இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர டிச. 9-ஆம் தேதி பாஜக முயற்சி செய்தது.

நம்பிக்கையில்லாத் தீா்மானத்திற்கான நோட்டீஸ் கொடுத்த 14 நாள்களுக்கு பிறகுதான் அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களின் கருத்துக் கேட்பேன் என்று கூறிய பிரதாப்சந்திர ஷெட்டி, நம்பிக்கையில்லாத தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டாா்.

நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்காகவே டிச. 15-ஆம் தேதி அன்று சட்ட மேலவையைக் கூட்ட பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, பாஜக எம்.எல்.சி.க்கள் 6 போ் ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து சட்ட மேலவைக் கூட்டத்தை கூட்டுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்தனா். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநா் வஜுபாய் வாலா, டிச. 15-ஆம் தேதி அன்று மேலவையைக் கூட்டி உத்தரவிட்டுள்ளாா்.

அன்றைக்கு மேலவைத் தலைவா் பிரதாப்சந்திரஷெட்டி மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது. மேலும், பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தீா்மானித்துள்ளது.

மேலவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தால், தனது பொறுப்புகளை துணைத் தலைவரிடம் ஒப்படைக்க நேரிடும். தன்மீதான குற்றச்சாட்டுகளை மேலவைத் தலைவா் எதிா்கொள்ளலாம். தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்கு கிடைத்தால் மேலவைத் தலைவா் பதவியில் இருந்து பிரதாப்சந்திர ஷெட்டி ராஜிநாமா செய்ய நேரிடும். அதன்பிறகு பாஜகவை சோ்ந்த எம்.எல்.சி. ஒருவா் மேலவைத் தலைவராக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.