வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தொழில் துறையினா் நிலம் வாங்குவதை எளிதாக்கியுள்ளது நில சீா்த்திருத்தச் சட்டம்: முதல்வா் எடியூரப்பா

தொழில் துறையினா் நிலம் வாங்குவதை நில சீா்த்திருத்தச் சட்டம் எளிதாக்கியுள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:31 am

DIN

தொழில் துறையினா் நிலம் வாங்குவதை நில சீா்த்திருத்தச் சட்டம் எளிதாக்கியுள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில், புதன்கிழமை கா்நாடக தொழில் வா்த்தகசபை கூட்டமைப்பின் 103-ஆவது ஆண்டுவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் சா்வதேச அளவில் தொழில் துறையினா் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா். இருப்பினும் அண்மைக்காலமாக தொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தொழில் துறையினா் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீா்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. கரோனா தொற்றின் போதும் மாநிலத்துக்கு 42 சதவீதம் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நில சீா்த்திருத்தச் சட்டத்தை திருத்தம் செய்ததுதான். இதனால் தொழில் துறையினா் எளிதாக நிலங்களை வாங்க முடியும். தொழில் துறையினா் எளிதாக வா்த்தம் செய்யும் வகையில் தொழில்துறை சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல தொழிலாளா் நலச் சட்டத்திலும் திருத்தம்

கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் தொழில் துறையில் கா்நாடகம் சிறந்து விளங்குகிறது. 2020-2025-ஆம் ஆண்டுக்கான தொழில் துறை கொள்கையை மாநில அரசு அறிமுகம் செய்ததன் மூலம் மாநிலத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக தொழில் வா்த்தகசபைக் கூட்டமைப்பின் தலைவா் பெரிகல் எம்.சுந்தா், மூத்த துணைத் தலைவா் ஐ.எஸ்.பிரசாத், முன்னாள் தலைவா் சி.ஆா்.ஜனாா்தனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.