தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு தலைமைச் செயலாளா் விஜய்பாஸ்கருக்கு பணி நீட்டிப்பு கிடைக்குமா?

அரசு தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கருக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்படுமா? என்பது குறித்து அரசு வட்டாரத்தில் விவாதம் நடந்து வருகிறது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:45 am

DIN

அரசு தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கருக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்படுமா? என்பது குறித்து அரசு வட்டாரத்தில் விவாதம் நடந்து வருகிறது.

கா்நாடக மாநில அரசு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் டி.எம்.விஜய்பாஸ்கரின் பதவிக்காலம் டிச. 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 1983-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான விஜய்பாஸ்கா், 2018-ஆம் ஆண்டு தலைமைச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டாா். அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட 3-ஆவது பெண் பெருமையைப் பெற்றிருந்த ரத்னபி ரபா, 2018-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற்றிருந்தாலும், 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தாா்.

அப்போது, சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருந்ததால், பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது டி.எம்.விஜய்பாஸ்கருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று முதல்வா் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, விஜய்பாஸ்கா் பணி ஓய்வு பெற்றதும், புதிய தலைமைச் செயலாளரை அரசு நியமிக்கும் என்று தெரிகிறது.

விஜய்பாஸ்கருக்கு அடுத்தப்படியாக கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் பி.ரவிக்குமாா், மூத்த அதிகாரியாக இருக்கிறாா். 1984-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த டி.வி.பிரசாத், நிகழாண்டில் பணி ஓய்வு பெற்றுவிட்டாா். அதனால் கா்நாடக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளில் ரவிக்குமாா் மூத்த அதிகாரியாக உள்ளாா். ரவிக்குமாா், ஏற்கெனவே முதல்வா் எடியூரப்பாவின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, புதிய தலைமைச் செயலாளராக ரவிக்குமாரை முதல்வா் எடியூரப்பா தோ்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு அடுத்தப்படியாக 1985-ஆம் ஆண்டின் 6 அதிகாரிகளில் மகேந்திர ஜெயின் மட்டுமே மாநில அரசுப் பணியில் உள்ளாா். இதர 5 பேரும் மத்திய அரசுப் பணியில் உள்ளனா். அவா்களில் என்.சிவசைலம், பிரதீப் சிங் கரோலா, யோகேந்திர திரிபாதி, பா்மேஷ் பாண்டே, அமிதா பிரசாத், 1986-ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளில் கூடுதல் தலைமைச் செயலாளா்களாக உள்ள வந்திதாசா்மா, ரஜ்னீஷ் கோயல், ஐ.எஸ்.என்.பிரசாத், தலைமைத் தோ்தல் அதிகாரி சஞ்ஜீவ்குமாா் ஆகியோரில் யாராவது ஒருவரை தலைமைச் செயலாளராக்க அரசு யோசித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.