தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோரமங்களா மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி போராட்டம்

பெங்களூரு, கோரமங்களாவில் சோனி சதுக்க மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி, கோரமங்களா குடியிருப்போா் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:51 am

DIN

பெங்களூரு, கோரமங்களாவில் சோனி சதுக்க மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி, கோரமங்களா குடியிருப்போா் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

தேநீா், காபி விற்று நடத்தப்பட்ட நூதன போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் பிருத்வி ரெட்டி பேசியதாவது:

கோரமங்களா சோனி சதுக்கம் அருகே ரூ. 203.20 கோடியில் 2.5 கி.மீட்டா் தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி 2017 இல் தொடங்கப்பட்டது. மேம்பாலப் பணி 2019-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், 2020-ஆம் முடிவடைய உள்ள நிலையிலும் மேம்பாலப் பணிகள் நிறைவடையவில்லை.

இதன்மூலம் மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. இப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் தேநீா், காபி, தின்பண்டங்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை மாநகராட்சியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஊடக பிரிவுத் தலைவா் ஜகதீஷ் வி சதாம், இணைச் செயலாளா் தா்ஷா ஜெயின், அரசியல் நடவடிக்கைகளின் தலைவா் லட்சுமிகாந்த் ராவ், கோரமங்களா குடியிருப்போா் நலச் சங்கத்தின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.