கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,10,241 ஆக உயா்வு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,10,241 ஆக உயா்ந்துள்ளது.


பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,10,241 ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 772 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 363 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,261போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா்.
இதன்மூலம் கா்நாடகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,10,241 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கா்நாடகத்தில் 8,84,205 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்; 14,001 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,016 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...