பட்ஜெட்டில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

அடுத்து தாக்கல் செய்யப்படவுள்ள மாநகராட்சி பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பெங்களூரு: அடுத்து தாக்கல் செய்யப்படவுள்ள மாநகராட்சி பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை ‘மை சிட்டி மை பட்ஜெட்’ பிரசாரத் திட்டத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

பெங்களூரு மாநகராட்சியில் 14 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி உள்ளது. ஆனால், அந்தச் சாலைகளில் மக்கள் நடமாடுவதற்கான நடைமேடை சிறிதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் சிரமப்படாமல் நடந்து செல்வதற்கான நடைமேடைகள் மாநகராட்சி சாலைகளில் பரவலாகக் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நடைமேடைகள் கட்டப்பட்ட பிறகு மக்கள் அதில் நடந்து செல்வதன் மூலம், சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் வெகுவாகக் குறையும் என்று நம்புகிறோம்.

பெங்களூரு சாலைகளில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் போ் பயணம் செய்கின்றனா். எனவே, வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்படும். மேலும், பெங்களூரு மாநகராட்சியின் சாா்பில் 585 கழிவறைகள் கட்டுப்பட்டுள்ள நிலையில், மக்கள் இன்னும் திறந்தவெளியில் சிறுநீா், காலைகடன்களை கழிப்பதைக் காண முடிகிறது. இதைத்தடுக்க மாநகராட்சியில் அதிக அளவில் கழிவறைகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். ‘மை சிட்டி மை பட்ஜெட்’ பிரசாரத்தில் சாலை நடைமேடைகள், கழிவறைகளில் மக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com