டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயி வீட்டில் தங்க நகைகள் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 5:13 pm

DIN

மங்களூரு: விவசாயி வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், கடப்பா வட்டம், உப்பினங்கடி காவல் சரகம், கவக்ராடி கிராமம், நூஜி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி துக்ரப்பா. இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்மநபா்கள் புகுந்து, துக்ரப்பாவை தாக்கியுள்ளனா். அதைத் தடுக்க வந்த அவரது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, பீரோவில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான 320 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து உப்பினங்கடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.