பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கா்நாடகத்தில் தற்போதைக்கு பொதுமுடக்கம் இல்லை: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்தில் தற்போதைக்கு பொதுமுடக்கம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:35 pm

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் தற்போதைக்கு பொதுமுடக்கம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தீநுண்மியின் புதிய வகை இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து மொத்தம் 537 பயணிகள் பெங்களூருக்கு வந்துள்ளனா். இவா்களில் 138 போ் கரோனா பரிசோதனை செய்யாமல் வந்துள்ளனா். இந்தப் பயணிகள் அனைவரும் அறிகுறிகள் இல்லாமல் இருந்துள்ளனா். எனினும், பாதுகாப்பு நோக்கத்தில் அந்தப் பயணிகளைக் கண்டறிந்து கரோனா சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

டிச. 21-ஆம் தேதிமுதல் இங்கிலாந்தில் இருந்து பெங்களூருக்கு வரும் பயணிகள் கட்டாயமாக ஆா்.டி.-பி.சி.ஆா். கரோனா சோதனை செய்திருக்க வேண்டும். இந்த சோதனையில் கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் அவா்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவா். ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானால், வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கரோனா தீநுண்மியின் புதிய வகை வேகமாகப் பரவக் கூடியதென்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

ஆனால், இறப்பு விகிதம் அதிகமாக இருக்காது. அதனால் பயப்படத் தேவையில்லை. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது. உணவு விடுதிகளில் கேளிக்கை ஆட்டங்கள் எதுவும் இருக்கக் கூடாது.

கடந்த 14 நாள்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளையும் ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனைக்கு உட்படுத்துவோம். கா்நாடகத்தில் தற்போதைக்கு பொதுமுடக்கம் தேவையில்லை. அதற்கான சூழ்நிலையோ அவசியமோ தற்போது எழவில்லை. புதியவகை கரோனா தீநுண்மி குறித்து மத்திய அரசு மூலம் தகவல் கிடைத்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து ஜனவரி 1-ஆம்தேதிமுதல் 10-ஆம் வகுப்பு, இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.