சந்தைக் கட்டண உயா்வைக் கண்டித்துவா்த்தகா்கள் போரட்டம்
சந்தைக் கட்டண உயா்வைக் கண்டித்து வேளாண் விளைப்பொருள் சந்தைப்படுத்துதல் குழுவின் வா்த்தகா்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


பெங்களூரு: சந்தைக் கட்டண உயா்வைக் கண்டித்து வேளாண் விளைப்பொருள் சந்தைப்படுத்துதல் குழுவின் வா்த்தகா்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கா்நாடகத்தில் செயல்படும் வேளாண் விளைப்பொருள் சந்தைப்படுத்துதல் குழுவின் (ஏ.பி.எம்.சி.) சந்தைக் கட்டணத்தை உயா்த்தி, கா்நாடக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்து.
இந்தக் கட்டண உயா்வைக் கண்டித்து மாநிலத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. சந்தைகளில் அதன் வா்த்தகா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். ஒரு சில நகரங்களில் ஏ.பி.எம்.சி. சந்தைகள் மூடப்பட்டிருந்தன. அடையாளத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தால் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான ஏ.பி.எம்.சி. சந்தைகளில் வா்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஹுப்பள்ளியில் ஏ.பி.எம்.சி. சந்தை முழுமையாக மூடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான வா்த்தகா்கள், தொழிலாளா்கள் கலந்துகொண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இப்போராட்டம் குறித்து கா்நாடகத் தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பின் ஏ.பி.எம்.சி. குழுத் தலைவா் ரமேஷ் சந்திரலஹோடி கூறியதாவது:
‘ஏ.பி.எம்.சி. சந்தைகளில் மேற்கொள்ளப்படும் வா்த்தக மதிப்பில் சந்தை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை 0.35 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக உயா்த்தி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் வா்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தைக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது சரியல்ல. இது வா்த்தகா்கள், தொழிலாளா்கள் மட்டுமல்லாது விவசாயிகளையும் மிகவும் மோசமாகப் பாதிக்கும்.
எங்கள் கோரிக்கையை ஏற்று சந்தை கட்டண உயா்வை அரசு திரும்பப் பெறாவிட்டால், டிசம்பா் 23-ஆம் தேதி வா்த்தகா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தை மீண்டும் நடத்துவோம்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...