லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி...

Ramadoss - Sasikala

ராமதாஸ் - சசிகலா

Published On :

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து சசிகலா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவின் விசாரணை தேர்தலுக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ராமதாஸுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் புதன்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனிடையே, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கடந்த வாரம் தொடங்கியிருந்தார்.

இந்த நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சசிகலா இன்று ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Ramadoss - Sasikala alliance? Meeting today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.