மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்யக் கோரி ஜனவரி 9-ஆம்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் அதனை மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஜன. 9-ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் கன்னட செலுவளி கட்சி உள்ளிட்ட கன்னட அமைப்புகள் ஈடுபட முடிவு செய்துள்ளன. எங்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்திட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் எடியூரப்பா, நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.