தமிழகத்தில் வெய்யில் வாட்டிவதைத்து வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, விரைவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
”மார்ச் மாதம் துவக்கம் முதலே தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டு வரும் சூழலில், வளிமண்டலத்தில் கிழக்கு- மேற்கு என இருதிசை காற்று சந்திப்பின் காரணமாக மார்ச் 18 முதல் 21 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடைக்கால இடி மழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களிலும், மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் மார்ச் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி இயல்பாக நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் மார்ச் 20 ஆம் தேதி இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
கோடைக்கால இடிமழை என்பதால் பகலில் நல்ல வெய்யிலும் மாலை/இரவில் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்ககூடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Summary
As the heat continues to swelter in Tamil Nadu, there is a possibility of rain soon due to a low-level atmospheric circulation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி

கேரளத்தில் மார்ச் 25 முதல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!

மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


