ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை அறிவுரை

பெங்களூரில் எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்,
Updated on
1 min read

பெங்களூரில் எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி காவல் துறை வழிகாட்டுதலின் பேரில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரு எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் திரளாகக் கூடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மற்ற இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதற்கான வழிகாட்டுதலை மாநகரக் காவல் ஆணையா் இரண்டொரு நாள்களில் உத்தரவு பிறப்பிப்பாா். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதற்கான வழிகாட்டுதலை கடந்த டிச. 17-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச. 30-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்களில் விருந்து, நடனமாடுவது, திரளாகக் கூடுவது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் தடை விதிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com