தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிறைவு பற்றி...

News image
கோப்புப் படம்- ANI
Updated On :12 மார்ச் 2026, 12:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து பங்குச்சந்தைகள் 2-ம் நாளாக இன்று(மார்ச் 12, வியாழக்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,369.65 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை அதிகபட்சமாக 900 புள்ளிகள் வரை சரிந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 829.29 புள்ளிகள் குறைந்து 76,034.42 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 227.70 புள்ளிகள் குறைந்து 23,639.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி 50 குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, ஈசர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.37 சதவீதம், 0.69 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறை வாரியாக, நிஃப்டி ஆட்டோ குறியீட்டுப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதேபோல நிதி சேவைகள், வங்கி, நுகர்வோர் பொருள்கள் குறியீடும் சரிந்தன.

ஐடி பங்குகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்தன. அதேநேரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு, மீடியா, உலோகம், கெமிக்கல் பங்குகள் உயர்வுடன் நிறைவு பெற்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று ஒரு பீப்பாய் 100 டாலரைத் (101.53) தாண்டியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் வெளிநாட்டு பங்குகள் அதிகம் விற்பனையானதாலும் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 92.37 ஆக வீழ்ச்சியடைந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சற்று மீண்டு 92.17 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.