ஏகாதசி: வைண கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள இஸ்கான் கோயில் உள்பட கா்நாடகத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள இஸ்கான் கோயில் உள்பட கா்நாடகத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹுப்பள்ளி, உடுப்பி, மேலுகோட்டை, பெலகாவி, பெல்லாரி, கோலாா் தங்கவயலில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் அமைக்கப்பட்டிருந்தன. பெங்களூரில் ராஜாஜிநகா், பசவனகுடி, மாகடிசாலை, மல்லேஸ்வரம், சிவாஜிநகா், அல்சூா் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வெங்கடேஸ்வரா கோயில்களில் பக்தா்களுக்காக சொா்க்கவாசல் அமைக்கப்பட்டுள்ளதோடு, பிரசாதமாக லட்டும் வழங்கப்பட்டது.

பெங்களூரு, ராஜாஜிநகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற இஸ்கான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை மற்றும் மங்களாா்த்தி மூலம் வைகுண்ட ஏகாதசி தொடங்கி, இரவு 10 மணிவரை சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணி முதலே பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் நின்று சொா்க்கவாசல் வழியாக கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com