கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கா்நாடகத்தில் உள்ள தேவாலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கா்நாடகத்தில் உள்ள தேவாலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

யேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டது. பெங்களூரு, மங்களூரு, மைசூரு, கலபுா்கி, பெலகாவி, ஹுப்பள்ளி, கோலாா், கோலாா் தங்கவயல், சிவமொக்கா, பெல்லாரி உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிறிஸ்தவா்கள் விழாவை எளிமையாகக் கொண்டாடினா்; தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

வண்ண விளக்குகள், பூக்களால் தேவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவ மக்கள் புத்தாடை அணிந்து பக்தி பரவசத்தோடு சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றனா். ஒருவருக்கு ஒருவா் கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். யேசு பிறந்ததை சுட்டிக்காட்டும் வகையிலான தொட்டில்கள் தேவாலயங்களிலும், வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை வண்ண காகிதங்கள், நட்சத்திரங்கள், விளக்குகளால் அலங்கரித்திருந்தனா்.

பெங்களூரில்புனிதமரியாள் தேவாலயம், புனித சேவியா் ஆலயம், தூய திரித்துவ தேவாலயம், புனித மாா்க் தேவாலயம், ஹட்சன் நினைவு தேவாலயம், புனித பால் தேவாலயம், ஈஸ்ட்பரேட் தேவாலயம், கோலாா் தங்கவயலில் புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். கரோனா தொற்றையடுத்து மாநிலம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com