விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 300 போ் தில்லி செல்ல முடிவு செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், கோலாரில் ஞாயிற்றுக்கிழமை மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவா் கே.நாராயண் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து கடந்த 1 மாதமாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடா்ந்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காமல், அரசு தொடா்ந்து மௌனம் சாதித்து வருகிறது. எனவே, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டிச. 31-ஆம் தேதி கோலாா் மாவட்டத்திலிருந்து 300 விவசாயிகள் தில்லிக்கு செல்ல முடிவு செய்துள்ளனா். அங்கு, விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனா் என்றாா்.
பேட்டியின் போது, கோலாா் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ஈகம்பள்ளி மஞ்சுநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.