பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

என் மகள் சாரா ஸ்டாரானது மகிழ்ச்சி: ஏ.எல். விஜய்

சாரா அர்ஜுன் குறித்து ஏ. எல். விஜய்...

இயக்குநர் ஏ. எல். விஜய் , சாரா அர்ஜுன்

Published On :

இயக்குநர் ஏ. எல். விஜய் நடிகை சாரா அர்ஜுன் குறித்துப் பேசியுள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ. எல். விஜய். இவர் இயக்கிய மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சைவம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

நடிகர் விஜய்யை வைத்து தலைவா என்கிற அரசியல் திரைப்படத்தையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையாக உருவான தலைவி திரைப்படத்தையும் இயக்கி கவனிக்கப்பட்டார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய சாரா அர்ஜுன் தெய்வ திருமகள் மற்றும் சைவம் படங்களில் நடித்து புகழ்ப்பெற்றார். தற்போது, துரந்தர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இந்தியளவில் கவனிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஏ. எல். விஜய், “சாரா எனக்கு மகள் போன்றவர். தன் பெற்றோரிடம் இருப்பதைவிட என்னிடமே அதிகமாக இருந்தாள். பள்ளி விடுமுறைகளின் போது என் வீட்டிற்கு வந்துவிடுவார். இப்போதும், வாரத்திற்கு ஒருமுறையாவது பேசிவிடுவோம்.

துரந்தர் பார்த்து முடித்ததும் சாராவை அழைத்து அப்பாவும் அம்மாவும் பெருமையடைந்திருப்பார்களே எனச் சொன்னேன். அதற்கு அவள், நீங்களும் அடைந்திருப்பீர்கள் என்றாள். என்னை மாமா என அழைத்தாலும் சாரா என் மகள்தான். அவளை நினைத்து மகிழ்ச்சியா இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Summary

director AL vijay shares his thoughts on actor sara arjun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.