vijay and sudha kongara
விஜய், சுதா கொங்கரா

நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை: சுதா கொங்கரா

நடிகர் விஜய் குறித்து சுதா கொங்கரா...
Published on

இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், பராசக்தி திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசிய சுதா கொங்கரா, “ஒரு திரைப்படத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் போலி ஐடிகளில் ஒளிந்துகொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பராசக்திக்கு எதிராக தொடர்ந்து பரவும் எதிர்மறையான விஷயங்களுக்கு பின்னால் அரசியல் இல்லை. இத்தாக்குதலை நடத்துவது பொங்கல் வெளியீட்டிற்கு வராத ஒரு நடிகரின் ரசிகர்கள்தான். இந்த ரௌடிகள், குண்டர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது." எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கும், அந்த ரசிகர்களிடமிருந்து மோசமான தாக்குதல்களும் மீம்களும் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா, “நான் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை. அவரை நேரில் சந்தித்தபோது இதனைக் கூறியிருக்கிறேன். விஜய் திரைப்படத்தின் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்கும் அளவுக்கு அவர் மீது நேசமுள்ளது. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.

vijay and sudha kongara
நான்தான் செழியன்! பராசக்தியை பாராட்டிய சீமான்!

ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாள் முன் தணிக்கை வாரியத்தால் பிரச்னை ஏற்பட்டு அப்படம் வெளியீட்டில் மாற்றம் கண்டது வேறு எந்த திரைப்படத்திற்கும் நடக்கக் கூடாதது. விஜய்யுடன் நாங்கள் போட்டிக்கு வருவதாகக் கூறுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்துடன் எப்படி போட்டிபோட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director sudha kongara spokes about jana nayagan and vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com