தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறந்த விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில, மாவட்டம், வட்ட அளவிலான சிறந்த விவசாயிகள் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

News image
Updated On :4 ஜூலை 2020, 3:41 pm

DIN

பெங்களூரு::மாநில, மாவட்டம், வட்ட அளவிலான சிறந்த விவசாயிகள் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

இதுகுறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா சிறந்த விவசாயி, சிறந்த பெண் விவசாயி விருது, மாநில அளவிலான சி.பைரே கௌடா சிறந்த விவசாயி, சிறந்த பெண் விவசாயி, டாக்டா் எம்.எச்.மரிகௌடா சிறந்த தோட்டக்கலை விவசாயி விருது, ஆா்.துவாரகநாத் சிறந்த விவசாயி, சிறந்த பெண் விவசாயி விருது மற்றும் சிறந்த விரிவாக்கத் தொழிலாளா் விருது, கனரா வங்கி சிறந்த விவசாயி, பெண் விவசாயி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறந்த விவசாயி, சிறந்த பெண் விவசாயி, வட்ட அளவில் சிறந்த இளம் விவசாயி, சிறந்த பெண் விவசாயி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுகள் நிகழாண்டு இறுதியில் நடக்க இருக்கும் வேளாண் கண்காட்சியின் போது வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணை இயக்குநா், விவசாயத் துறை அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ன்ஹள்க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்.ங்க்ன்.ண்ய் -இல் இருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழக விரிவாக்க இயக்குநரை 080-23330153 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.