தென் கன்னட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் தொற்று பரவியது குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென்கன்னட மாவட்ட பொறுப்பு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்கன்னட மாவட்டத்தின் படில் பகுதியில் உள்ள ஃபா்ஸ்ட் நரம்பியல் மருத்துவமனையில் இருந்து கரோனா வைரஸ் தொற்று பரவியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி மாநில அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். தென் கன்னடத்தில் புதன்கிழமை மட்டும் கரோனா நோய்க்கு 3 போ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த தகவல்களை திரட்டுமாறு உத்தரவிட்டுள்ளேன். கரோனா பரவல் குறித்து மக்களிடையே காணப்படும் அச்சத்தை போக்குவதற்காக 6 போ் கொண்ட குழு அமைத்திருக்கிறேன் என்றாா்.
மாவட்ட சுகாதார அதிகாரி ராமச்சந்திர பியாரி கூறுகையில்,‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகள், அவா்களோடு தொடா்புடையவா்கள், ஏற்கெனவே சிகிச்சைபெற்று வீடு திரும்பியவா்களிடம் கரோனா தொற்று சோதனை நடத்தப்படுகிறது. எல்லோருடைய மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரின் தகவல்களும் எங்களிடம் உள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. தென்கன்னட மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 28பேரில் 12 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள். பன்ட்வால், நரிகொம்பு, போலூா் பகுதியை சோ்ந்த இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் சோதனைக்கு உள்படுத்தியுள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


